தமிழோடு வாழ்பவன்..

My photo
சுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia
மனிதத்தை மதிக்கும் மனிதன்..

Monday, March 2, 2009

சொன்னா கேக்கனும்!

(மலேசிய வானொலியில் அறிவிப்பாளராக இருந்தபோது, காலைக் கதம்ப நிகழ்ச்சியில் நான் சொன்ன தகவல்..)
சரி இப்பொழுது உங்களுக்கு ஒரு சின்ன பரிட்சை... சரியா? நீங்கள் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை.. நான் சொல்வதை கவனமாக கேளுங்கள்...ரெடியா?

கொஞ்சம் அமைதியாக இருங்கள்.. கண்களை மூடிக்கொள்ளுங்கள்.. நான் சொல்வதை கவனமாக கேளுங்கள்.. எல்லோரும் இப்பொழுது, தயவு செய்து நீல நிறத்தை.. நீல வர்ணத்தை நினைக்காதீர்கள்... யாரும்.. நீல நிற வர்ணத்தை நினைக்காதீர்கள்... சொன்னா கேளுங்க.. நீல நிறத்தை எண்ணாதீர்கள்!!!!!
என்ன ஆச்சு? ஹஹஹ..நீல நிற வர்ணத்தை நினைக்காதீர்கள்... என்று நான் சொன்னதும்.. முதலில் உங்கள் மனக்கண்ணில் தோன்றியது என்ன நிறம்? நீல நிறம் தானே... உண்மையா? இதிலிருந்து என்ன தெரிகிறது? எப்பொழுதும், யாரிடமும் Negative கட்டளைகளை நேரடியாக சொல்லக்கூடாது. அவற்றை மறைமுகமாக சொல்வதுதான் சிறந்தது...!
நீல நிற வர்ணத்தை நினைக்காதீர்கள்...என்று சொல்வதற்கு பதில், சிகப்பு வர்ணத்தை நிணையுங்கள் என்று நான் சொல்லியிருந்தால், உங்களுக்கு நீல நிறம் பற்றிய சிந்தனையே தோன்றியிருக்காது அல்லவா...?

இங்கே குப்பை போடாதீர்கள் என்று எழுதி வைத்தால்.. அங்கேதான் அதிகம் குப்பையை கொட்டுவார்கள்.. இது நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கும் சாதாரண விஷயம்தான்... இப்படி பல உதாரணங்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்... இது மனோவியல்..

பெற்றோர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்... பிள்ளைகளிடம் அதை செய்யாதே.. இதை செய்யாதே என்று சொல்வதை விட .. எதை செய்யலாம் எப்படி செய்யலாம் என்று சொல்லுங்கள்... அவர்களுக்கு அது சுலபமாக புரியும்... அவர்கள் உங்கள் சொற்படி நடப்பார்கள்.. சரியா?

இது அறிவுரை அல்ல.. ஆலோசனை..

4 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

நல்ல தகவல்... இப்படி தான் பள்ளி காலத்தில் மாணவர்கள் சிகரட்டு பிடிக்கக் கூடாதுனு முகாம்கள் நடத்துனாங்க... அது எப்படி இருக்குனு டிரை பண்ணிடனும்னு நிறைய பசங்களுக்கு அப்போது தான் அந்த எண்ணம் துளிர்விட ஆரம்பம் ஆனது :))

கிருஷ்ணா said...

சைக்காலஜி தெரியாம இப்படித்தான் நிறைய தவறான கருத்துக்களை சொல்லி எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கி விடுகிறோம்..

து. பவனேஸ்வரி said...

புரிந்துக்கொண்டேன்...

மனோவியம் said...

கருத்தான கருத்துக்கள்.காலத்தால் அழியாத முத்துகள்.ஜப்பகாரனின் முயற்ச்சிக்கு புதிய முகவுரை எழுதியமைக்கு மிக்க நன்றி.வாழ்துக்கள்
நண்பரே.புதிய பார்வை.நயம் பயக்கும் கருத்துக்கள்