தமிழோடு வாழ்பவன்..

My photo
சுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia
மனிதத்தை மதிக்கும் மனிதன்..

Thursday, April 2, 2009

மீன் தொட்டியும்.. வாழ்க்கையும்..

ஒரு கதை சொல்கிறேன் வாருங்கள்.. இது கட்டுக் கதை அல்ல... கற்றுக்கொள்ள வேண்டிய கதை.

ஜப்பானியர்கள் அதிகம் விரும்பி உண்ணக்கூடிய உணவு.. சுஷி! அதிலும் மீன் சுஷி என்றால் அங்கே மவுசு அதிகம், மீனுக்கும் மவுசு அதிகம்.

ஒரு காலத்தில் ஜப்பானில் மீன்பிடி தொழிலுக்கு பெரிய மருட்டலாக இருந்தது ஒரு பிரச்சனை. அதாவது, ஜப்பானியர்கள்.. பழைய மீன்களையோ, இறந்த மீன்களையோ விரும்பி உண்ண மாட்டார்கள். அவர்களுக்கு தேவை.. புதிய மீன்கள்.. வளப்பமான மீன்கள்.

அந்த காலத்தில், ஆழ் கடலில் மீன் பிடிக்கும் ஜப்பானியர்கள், பெரிய-பெரிய குளிர்சாதன பெட்டிகளை அமைத்து மீன்களை கரைக்கு எடுத்து வந்தனர். ஆனால், அந்த மீன்கள் விலை போகவில்லை. காரணம் அவை இறந்து போன மீன்கள்.. என்ன செய்வது..? அரசாங்கமே யோசித்தது.. மீனவர்களுக்கு உதவ..

பிறகு மீன்களை உயிரோடு கரைக்கு கொண்டு வர, கப்பலில் பெரிய பெரிய தொட்டிகள் கட்டி, அதில் நீரை நிரப்பி.. மீன்களை கொட்டி கொண்டு வந்தனர். தொட்டிகளில் அடைபட்டு, நீந்தாமல் சோம்பிக் கிடந்தன மீன்கள். கரைக்கு வந்த பிறகு, அந்த மீன்களும் விலை போகவில்லை! காரணம், சோம்பிக்கிடந்த மீன் இறைச்சி ருசியாக இல்லையாம்! என்ன செய்வது? மீண்டும் யோசித்தனர். பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டனர். இறுதியில் கணடாவைச் சேர்ந்த ஒரு ஆலோசகரை நியமித்தனர். அவர் சொன்ன ஆலோசனை என்ன தெரியுமா???


ஆம்.. மீன் தொட்டிகளில் சிறிய சுறா மீன்களை போடுங்கள் என்று சொன்னாராம். பிறகு என்ன நடந்தது தெரியுமா? சுறா மீன் பயத்தில் மீன்கள் நீந்திக்கொண்டே கரைக்கு வந்து சேர்ந்தன. சுறா மீன்களும் ஒன்றிரண்டு மீன்களை மட்டுமே தின்றன.. கரைக்கு வந்த மீன்களுக்கு.. இப்போது ருசியும் அதிகம்.. மவுசும் அதிகம்..!

ஆம்.. நமது வாழ்க்கையும் அந்த மீன் தொட்டி மாதிரிதான்.. சுறா மீன்கள் என்னும் சிறு சிறு போராட்டங்கள், தடங்கல்கள், பிரச்சனைகள், எதிரிகள் இவை எல்லாம் இருந்தால்தான்.. நாம் சுறுசுறுப்பாக இயங்க முடியும் என்று நினைத்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுங்கள்!

அன்புடன் K.கிருஷ்ணமூர்த்தி

4 comments:

ஹேமா said...

நாம் தூங்கினால் வாழ்வும் தூங்கும் என்று சும்மாவா சொன்னார்கள்.
முயற்சியும் தேடலும் இல்லா வாழ்க்கை வீண்.தத்துவம் சொல்லும் அனுபவக் கதை.

கிருஷ்ணா said...

கருத்துக்கு நன்றி தோழியே!

வனம் said...

வணக்கம் கிருஷ்ணா

ஆமாம் உண்மைதான்,

இதையேதான் ஹிட்லர் கொஞ்சம் வேறுமாதிரி சொல்லி இருந்தார்

\\ உனக்கு யாராவது எதிரிகள் இருந்தால்தான் நீ உயரமுடியும் என \\

இராஜராஜன்

கிருஷ்ணா said...

நன்றிங்க வனம்.. ஹஹ.. அருவியில் தடைப் பாறைகள் இருந்தால் தானே இனிய ஓசை இருக்கும்.. அதுபோலத்தான் இதுவும்.. சில வேளைகளில், பெரிய பெரிய பிரச்சனைகளை, சிறு சிறு முயற்சிகளாலும், சிந்தனைகளாலும் சமளிக்கலாம் என்பதற்கு இந்த கட்டுரை ஆதாரம் என நான் கருதுகிறேன்..