தமிழோடு வாழ்பவன்..

My photo
சுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia
மனிதத்தை மதிக்கும் மனிதன்..

Saturday, March 14, 2009

தமிழின் சிறப்பு - ஓரெழுத்து வார்த்தைகள்

தமிழ் மொழி, மிகவும் தொண்மையானது. இது யாவரும் அறிந்ததே! தமிழில் நிறைய சிறப்புக்கள் உள்ளன.. அதில் ஒன்று : தமிழில்தான், அதிகமான ஓரெழுத்து சொற்கள் இருக்கின்றன. அதிலும் கூட, அந்த ஓரெழுத்து வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள்!!!
உதாரணத்திற்கு :

அ - அழகு, சுட்டும் சுட்டெழுத்து (அங்கே)
ஆ - பசு, ஒரு வித மரம்
இ - இங்கே
ஈ - ஒரு சிறு உயிரினம்
உ - கடிதம் எழுதுவதற்கு முன் நிறைய பேர் 'உ' என்று எழுதுவர், அதன் அர்த்தம் தெரியாமலேயே. இந்த 'உ' சிவசக்தியை குறிக்கும்.
ஊ - ஊன் (தசை)

கை, மை, பை, வை.. இப்படி ஓரெழுத்து வார்த்தைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இது தமிழ் மொழியில் தொன்மையையும் வன்மையையும் காட்டுகிறது. இப்படி சிறப்பு வாய்ந்த தமிழை பேசுவதற்கே இன்று பலர் தயங்குகின்றனர்.

இனியாவது, நல்ல தமிழ் பேசுவோம்..!

(இது மலேசிய வானொலியில் காலைக்கதம்பம் நிகழ்ச்சியில் அறிவிப்பாளராக நான் சொன்ன கருத்து, இந்த கருத்தைச் சொல்லிவிட்டு நான் ஒலியேற்றிய பாடல் : தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு.. ஒரு
சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு!)

5 comments:

து. பவனேஸ்வரி said...

நல்லதொரு கட்டுரை. 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதானது எங்கு காணோம்' என்றான் பாரதி. தமிழ் இனிமை வாய்ந்தது மட்டுமல்ல சிறப்பு வாய்ந்ததும் கூட என்பதனை உங்கள் எழுத்து நிரூபிக்கின்றது. வாழ்த்துக்கள்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல கட்டுரை.. இதை எல்லாம் யார் கவனிக்கிறார்கள்? நமது பயன்பாட்டில் தமிழ் என்ற எனது பதிவுகளையும் படித்துப் பாருங்கள்!

கிருஷ்ணா said...

கருத்துக்கும்.. கனிவான பின்னூட்டுக்கும் நன்றி தோழி..!

கிருஷ்ணா said...

அன்பான நண்பரே.. கருத்துக்கு நன்றி.. இதோ.. இப்பொழுதே உங்கள் வலைப்பக்கத்திற்கு வருகிறேன்..!

Anonymous said...

Migavum nandraga irukkiradhu nanbare!
Anal yendhan aangilathil pesinal mattum madhikkirargal yenbadhu theriyavillai .Vungaladhu katturaiku enadhu migapperiya vazhthukkal!!!!