குயவர்கள் மண்பாண்டம் செய்வதை நீங்கள் பார்த்ததுண்டா?
சுழலும் சக்கரத்தில் களிமண்ணை வைத்து... பாண்டத்தை உருவாக்குவார்கள்.. ஒரு கையால் உள்ளிருந்து அணைத்தபடியும்.. மறு கையால் வெளியே இருந்து தட்டிக்கொடுத்தபடி அவர்கள் அந்த பாண்டங்களை உருவாக்குவார்கள்.. இந்த இரு கைகளின் அழுத்தமும் ஒரே அளவில் இருப்பது முக்கியம்.. பிறகு அவற்றை உலையில் போட்டு சூடு காட்டுவார்கள்.. அப்பொழுதுதான்.. அந்த பாண்டம் நமக்கு பயனளிக்க வல்லதாக இருக்கும்... ஏதாவது ஒரு கையின் அழுத்தம் அதிகமானாலும், அந்த பாண்டம் உருப்பெறாது!
குழந்தை வளர்ப்பும் அப்படித்தான்... பாசம் எனும் ஒரு கையால் அணைத்து... கண்டிப்பு என்னும் மறு கையால் கண்காணிப்போடு வளர்க்க வேண்டும்.. பாசம் கூடினாலோ.. கண்டிப்பு அளவுக்கு மீறினாலோ.. குழந்தைகள் நாம் நினைப்பதுதால் வளர மாட்டார்கள்.. இப்படி முறையாக வளர்த்த பிள்ளைகளை, வாழ்க்கை என்னும் உலையிலிட்டு சூடு காட்ட வேண்டும்.. அப்பொழுதுதான்.. நம் குழந்தைகள், நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்ல மக்களாக திகழ்வார்கள்..!
தமிழோடு வாழ்பவன்..
Saturday, March 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
வணக்கம் கிருஷ்ணா.
குழந்தைகளையும்,மண் பாண்டங்கள் செய்வதையும் சமப்படுத்திப் புரிய வைத்திருக்கிறீர்கள்.நினைத்துப் பார்க்க உண்மைதான்.
நன்றிங்க ஹேமா..
என்னே ஒரு உவமை..
அருமையான கருத்து!
Voted
Post a Comment