நாம் ஒரு விஷயத்தை பார்க்கும் பொழுது, அந்த விஷயம் நமது மூளையில் 15 விழுக்காடு பதிவாகிறது. பாக்கி 85% நமக்கு மறந்து விடுகிறது.
அதே போல ஒரு விஷயத்தை கேட்பதால், காதால் கேட்படால், 12% நமது மூளை அந்த விஷயத்தை ஏற்றுக்கொள்கிறது! 88% மறந்து விடுகிறது..
தொடுவதால், ஒரு விஷயத்தை 5% மட்டும் நமது மூளை ஏற்றுக்கொள்கிறது.. 95% நமக்கு அந்த விஷயம் மறந்து விடுகிறதாம்..!
பிறகு எதைச் செய்தால்.. எதைச் செய்தால் நம் மூளை ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்ளும்? நல்ல ஞாபகத்தில் இருக்கும்?
ஆம், ஒரு விஷயத்தை பற்றி நாம் வாசிக்கும் பொழுது அல்லது சொல்லிப்பார்க்கும் பொழுது, மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்க்கும் பொழுது அந்த விஷயம் நமது மூளையில் 85% விழுக்காடு வரை பதிவாகிறது!
அந்த விஷயததையே, எழுதி வாசித்தால், 85 சதவிகிதத்திலிருந்து, 95 சதவிகிதம் வரை நமது மூளையில் அது பதிவாகிறது!
இதனால்தன், மாணவர்களை, குறிப்பெழுதி படிக்க சொல்கிரார்கள். மீண்டும் மீண்டும் மீள்பார்வை, அதாவது revision செய்ய சொல்கிரார்கள். இது மாணவர்களுக்கு மட்டுமல்ல.. நம் எல்லோருக்குமே..
நல்ல ஞாபக சக்தி தேவை என்று நினைப்பவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.. ஆக, இனி முக்கியமான விஷயங்களை ஒரு புத்தகத்தில் குறித்து வைத்துக்கொண்டு, நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பக்கங்களை புரட்டிப் பாருங்கள்.. நீங்கள் படித்த பல விஷயங்கள் உங்கள் ஞாபகத்தில் பசுமரத்தாணிபோல இருக்கும்...!
தமிழோடு வாழ்பவன்..
Thursday, April 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அருமையாகச் சொன்னீர்கள். எதையும் எழுதி வைத்தால் மறந்து போகாமல் இருக்கும். :)
அதனால் தான் நான் காதல் கடிதம் எழுதியதில்லை. ஞாபகத்தில் பதிஞ்சிடுச்சினா தூங்கும் போது பேயாய் பயம் காட்டிவிடும் எனும் அச்சம் தான். :)
யோவ்.. உங்க லொள்ளுக்கு அளவே இல்லையா?! ஹஹ
காதல் கடிதம் எழுதாமலே கனிகையரை கவர்ந்து விடுகிறீரோ?! பலே கில்லாடி விக்கி!
Post a Comment