அண்மையில் ஒரு மலேசிய வானொலியில் பேட்டி ஒன்றை கேட்க நேர்ந்தது.. அயல் நாட்டில், ஆங்கிலேய நாட்டில், தமிழ்த் தொலைக்காட்சியில் பணிபுரியும் ஒரு பெண் குயிலின் பேட்டி அது. மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் தமிழ் பேசியது அந்த குயில். அந்த குயில் பெற்றோரின் உதவியால் சொந்தமாக தமிழ் படித்து அயல் நாட்டில் அரங்கேற்றம் கண்டு, தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. உண்மையிலேயே, குரலில் நல்ல தெளிவு, தன்னம்பிக்கை, தன்னடக்கம்... என்னை வெகுவாக கவர்ந்தது அந்த பேட்டி - ஒரு சில நெருடல்களுக்கு இடையே!
அவர் சொன்ன சில விஷயங்கள் என்னை குழப்பி விட்டன! அயல் நாட்டில் குடிபெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் தான் உண்மையில் நல்ல தமிழ் பேசுகிறார்கள் என்று அவர் கூறியது என்னை நெருடியது!
ஈழச் சோதரர்கள் மீது எனக்கு பாசமும் நேசமும் பற்றும் பொறுப்பும் இருக்கிறது.. அது நானே மறுத்தாலும் மறைக்க முடியாத உண்மை! இருந்தாலும் அவர் கூறிய கூற்று.. என்னை நெருடியது!
ஈழச் சகோதரர்கள் பேசும் தமிழில் பல வார்த்தைகள் தமிழ் அகராதியில் காணக் கிடைக்காத பொழுது, அவர்கள்தான் நல்ல தமிழ் பேசுகிறார்கள் என்று அவர் சொன்ன கருத்து... என்னை வெகுவாகப் பாதித்தது! உதாரணத்திற்கு, ஆம் என்பதற்கு 'ஓமோம்' (நண்பரின் பின்னூட்டுக்குப் பிறகு திருத்தப் பட்டது) என்கிறார்கள். இது தமிழா? ஈழச் சகோதரர்கள் என்னை மன்னிக்க வேண்டும். நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றம் தானே!
அடுத்து ஒரு வாக்கியம் சொன்னார், பேட்டியின் இருதியில். "முடிந்த அளவுக்கு எல்லோரும் நல்ல தமிழில் பேசுவோம்" என்று. இந்த 'முடிந்த அளவுக்கு' என்னும் வார்த்தை சரியானதா? அந்த குயிலின் மேல் எனக்கு வருத்தமில்லை. நன்றாகத்தான் பேசினார். இருந்தாலும், இந்த வார்த்தை சரியான வார்த்தையா? அதென்ன.. முடிந்த அளவுக்கு?! இயன்ற அளவுக்கு என்றுதானே சொல்லி இருக்க வேண்டும்! 'முடிந்த 'அளவுக்கு என்றால் பொருட் குற்றம் ஏற்படாதா?
இது யாரையும் குறை சொல்ல எழுதும் பதிவல்ல.. ஒரு தெளிவு வேண்டி எழுதும் பதிவு. என்னைப் பொருத்த வரை, மலேசியத் தமிழர்களும், சிங்கப்பூர் தமிழர்களும் மற்ற இடங்களில் புலம்பெயர்ந்த தமிழர்களை விட சற்று அதிகமாக நல்ல தமிழை பேசுகின்றனர். அறிஞர் அண்ணா மலேயாவுக்கு வந்த போது, காலைப் பசியாற வாருங்கள் என்று அழைத்தவர்களை அவர் எப்படி மெய்மறந்து புகழ்ந்தார் என்பதை கேள்விப் பட்டிருக்கிறேன்.
ஆக, தமிழ் வல்லுனர்கள்.. இயன்றால் தெளிவு சொல்லுங்கள்.. நன்றி!
-கிருஷ்ணமூர்த்தி
டிராகனின் நடனம்: அமிலக் கல்லறை
4 years ago
12 comments:
உங்களின் பதிவு சிறிது சிந்திக்கச் செய்தாலும்.... நீங்கள் இரு விசயங்களை மறந்து விட்டீர்கள்... ஈழத்தமிழர்கள் நல்ல தமிழ் பேசுகிறார்களா? இல்லை தமிழகத் தமிழர்கள் நல்ல தமிழ் பேசுகிறார்களா? என்பது ஆராய்சி செய்ய வேண்டிய விடயம் ஆகும்.. ஆனால் ஈழத்தமிழ் ஊடகங்களில் நல்ல தமிழ் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் தமிழ்நாட்டு தமிழ் ஊடககங்களில் நல்ல தமிழ் மக்கள் டிவியை விடவும் வேறு எதிலும் இல்லை. நல்ல தமிழ் என்பது நம் வீட்டில் பேசினால், இல்லை உங்களுக்குள் பேசினால் பயன் இல்லை... அது ஊடகத்தில் பிரதிபலிக்க வேண்டும்...... நடைமுறையில் வர வேண்டும்......
இத்துணை போருக்கு மத்தியிலும், முழுவதும் தமிழிலேயே பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை அவர்கள் தமிழில் படித்து பட்டம் வாங்குகிறார்கள். ஆனால் நாம் அப்படியா இருக்கிறோம்.
ஆமா என்பது நல்ல தமிழா சார், ஈழவர்கள் ஓமம் என்றா சொல்லுகிறார்கள்.
ஆம் என்பது இருமுறை ஆம் ஆம் என்றாகி பின்னர் ஆமாம் என்றாகி பின்னர் ஆமாவாகிவிட்டது.
ஓம் என்பது ஓம் ஓம் ஆகி பின்னர் ஓமோம் என்று தான் உள்ளது. இரண்டிலும் தவறு இல்லையே.....
புலம் பெயர் நாடுகளில் தமிழை வாழ்வைத்துகுக் கொண்டிருப்பவர்கள் மலாயா தமிழர்கள் என்றாலும் .. ஈழத்தமிழர்களும் முயற்சிகளும் நடக்கின்றன. ஆனால் எந்தவொரு புலம் பெயர் சமூகம் போல மொழியை புறனாட்டில் தக்கவைப்பது இயலாத காரியம் என்பது என் கருத்து.
நீண்ட கருத்துக்கும், தகவலுக்கும் நன்றி தோழரே! "ஈழத்தமிழ் ஊடகங்களில் நல்ல தமிழ் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்" என்று சொன்னதற்கு நன்றி. ஈழத் தமிழ் சகோதரர்கள் தமிழ் உணர்வு மிக்கவர்கள் என்பதை நானும் மறுக்கவில்லை.. தமிழ் உணர்வு என்று வந்தால்,அவர்களை மிஞ்சுபவர்கள் தமிழ் நாட்டிலும் இல்லை என்பேன்.. ஊடகத்தில் நற்றமிழ் வளர்த்தல் நம் கடமை. நீங்கள் சிங்கைத் தமிழ் வானொலி கேட்டதுண்டா?
"இத்துணை போருக்கு மத்தியிலும், முழுவதும் தமிழிலேயே பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை அவர்கள் தமிழில் படித்து பட்டம் வாங்குகிறார்கள். ஆனால் நாம் அப்படியா இருக்கிறோம்."
உண்மைதான்.. மலேசியாவிலும் பல்கலைக்கழகம் வரை தமிழ் படித்து, தமிழ்த் துறையில் பட்டம் பெறுபவர்களும் உண்டு. இங்கேயும் 'போர்' இருக்கிறது.
எனது குழப்பம் அதுவல்ல நண்பரே..
ஓமம் என்று நான் தவறாக குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும்.. எனக்கு அது புரியாததால் நேர்ந்த பிழை.
ஒரே ஒரு உண்மையை சொல்லி விடுகிறேன்.. ஈழத் தமிழர்களை களங்கப் படுத்த எழுதிய பதிவல்ல இது! தமிழுக்காக எழுதிய பதிவு!
ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல தமிழ் நாட்டுத் தமிழர்களும் பேசும் தமிழ் இலக்கணச் சுத்தமானது அல்ல!தமிழ் நாட்டில் ஆங்கில வார்த்தைகளையே தமிழாக்கிப் பேசும் நடைமுறையும் உண்டு!சில தீந்தமிழ்ச் சொற்கள் காலக்கிரமத்தில் மருவி விட்டன!ஆங்கில வார்த்தைகளையே சுருக்கி விட்டார்கள்!உதாரணத்துக்கு வை-ஓ-யு யூ என்று எழுதுவதற்குப் பதிலாக இப்போது வெறும் யு வையே போட்டு விடுகிறார்கள்!நிற்க,சமீப காலத்தில் ஆங்கில வார்த்தைகளுக்கு சுத்தமான தமிழ் வார்த்தைகள் தேடி எடுக்கப்பட்டன!குறிப்பாக விடுதலைப் புலிகளின் காலத்தில்!பேரூந்து,சிற்றூந்து,,உந்துருளி,மற்றும்,குலிர்பானக் கடைகள்,கடைகளுக்குக் கூட சுத்தமான தமிழ் வார்த்தைகள் சூட்டப்பட்டன!உணவை அருந்த முடியாது, சாப்பிடவே முடியும்!அது போல் தேனீரை,தண்ணீரை சாப்பிட முடியாது!குடிக்கவே முடியும்!
கிருஷ்ணா,
நான் புலம் பெயர்ந்துவாழும் ஈழத்தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவள். முதலில் உங்கள் தலைப்பில் "நல்ல தமிழ்" என்கிறதே சற்று உதைக்கிறது. அது சுத்தத்தமிழ் என்றிருந்தால் பொருந்தாதா? அதற்கு எதிர்ப்பதம் என்ன கெட்ட தமிழா??
"ஓம்" என்ற வார்த்தைக்கெல்லாம் ஏன் நெற்றிக்கண்ணை திறக்கவேண்டும் என்று புரியவில்லை. எனக்குத்தெரிந்து ஓம் என்ற வார்த்தையை சுத்தத்தமிழ் இல்லை என்று யாரும் சொல்லவில்லை. அகராதியை கண்டுபிடித்த பின் மொழியை உருவாக்கினார்களா அல்லது மொழியை உருவாக்கிவிட்டு அகராதியை உருவாக்கினார்களா?? இப்போ உள்ள அகராதிகளை, குறிப்பாக agaraadhi.com என்கிற அண்ணாமலைப்பல்கலைக்கழக அகராதியை சோதித்துப்பார்க்கவும்.
முடிந்த அளவு என்பது முயன்ற என்று வருமென்று நீங்கள் நினைத்தால், "நல்ல தமிழ்" சுத்த தமிழ் என்று வரவேண்டுமென்று நான் நினைக்கிறேன், சரியா, தவறா? இங்கே அவர் முடிந்த அளவு என்று சொல்வது முடியுமான அளவுக்கு என்று அர்த்தப்படும்.
அட போங்கப்பா, சிங்களன் எங்களை வெறுப்படைய வைக்கிறது போதாதென்று நீங்க வேறயா!!!
"முள்ளிவாய்காலுக்கு முன்னாள்வரை ஈழத்தின் நோக்கோடு அநுகூலமாய் இருந்த கட்சி அதிமுகவே அல்ல திமுகதான் என்ற உண்மை மறுக்கப்பட அதிமுகவில்கூட ஒருவன் இல்லை!
இருந்தும் முள்ளிவாய்காலின் பின்னாள்களுக்கு, கலைஞர் பதவியில் ஜெயா இருந்திருந்தால் ஈழத்திற்கு அபயம் கிடைத்திருக்கும் என்ற எதிர்பார்ப்பு, பச்சை அறியாமையில் விளைந்ததன்றோ!
அப்படி என்றால் கலைஞரின் தோல்வியை விட ஜெயாவின் தோல்வி அல்லவா கொதிக்கும் தமிழன் நெஞ்சை சற்று ஆற்றும் மருந்தாகும்.
இந்த நிலைப்பாடுகளின் அடிப்படைக்குள் ஒளிந்திருக்கும் ஒரு உண்மையே இதற்கான விடை பகரும் உரிமை கொண்டிருக்கின்றது!
பின்னாளில் கலைஞர் ஏன் கையை விரித்தார் என்ற அதே காரணமே
ஜெயாவிற்கு முன்னாளில் புலிமீது பகையை விரிக்க காரணமாய் இருந்திருக்கின்றது என்றால், இருவர் உறவும் ஒரே வகையானது என்றுதானே பொருள்!
பதவி என்ற தேன் நிலவிற்கு கலைஞருக்கு புலிஆதரவுப் பல்லக்கு உபயோகமான அதேபோல் ஜெயாவிற்கு புலித்துவேசப் பல்லக்கு உபயோகமானது.
தேன் நிலவு நிர்பந்திக்கும் பட்சத்தில் கலைஞர் புலித்துவேசப் பல்லக்குக்கு ஒரு நொடியில் மாறிவிடுவார். இதுவே சமகாலத்தின் சாட்சியமாய் கிடப்பது.
எனவே கலைஞர் தான் முந்தைய பயணங்களில் புலிஆதரவுக்கு காட்டிய நல்ல மனதையும், ஜெயா காட்டிய தீய மனதையும் நெறுத்துப் பார் என்று கேட்பது, புத்தி உள்ளவன் குழந்தைக்கு நடிப்பதைப் போன்றது.
கசப்பாய் இருக்கின்ற விசமா, இனிப்பாய் இருக்கின்ற விசமா நல்லது என்ற கேள்வியே இல்லை?"
இதுல என்ன எழவாம் விளங்குதா
HI DEAR FRIENDS, I TELL YOU THE TRUE.. NO ONE SPEAKE PERFECT TAMIL IN THE WORLD. I'M SRI LANKAN ORIGINAL TAMILAN. BIT I'M NOT ORIGINAL TAMIL OK. I MEET INDIAN, SINGAPOREIN, MALAYSIAN. BUT NO PURE TAMIL. DONT CATCH THE WRONG EACH OTHER. THE LANGUAGE NEVER GIVE YOU NOTHING. JUST FOLLOW THE WORLD.
THANKS.
TAMILAN, NOT TAMIL.
தமிழ் வாழ்க.
நன்றி கிருஷ்ணா.
அருமையான படைப்பு
முதலில் நல்ல தமிழா? கெட்ட தமிழா? சுத்த தமிழா? அல்லது அசுத்த தமிழா? என்பதை விட்டு விட்டு நாம் அனைவரும் மற்ற மொழியின் வார்த்தைகள் கலக்காமல் தமிழை பேசுவோம்.எழுதுவோம்.அப்படி பேசுவதை தரக்குறைவாக எண்ணாமல் நமது மொழியில் நாம் பேசுகிறோம் இதில் தவறு என்ன இருக்கிறது என்று எண்ணுவோம்.நிறம்,வண்ணம் என்ற வார்த்தைகள் இருந்தும் colour என்பதனை உபயோகிக்காமல் அது[colour அல்லது நிறம்]வரும் வாக்கியங்களை நம்மால் பேசவே முடியவில்லை.இது போன்று இன்னும் எண்ணற்றவை.யார் என்ற ஆராய்ச்சியை விடுத்து நம்மில் இருந்து ஆரம்பிப்போம்.ஆர்வலர்கள் அனைவருக்கும் நன்றி.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
Pls Lah...Half the Malaysians cant even read or write Tamil. Only the ones who go to Tamil school can read and write a bit. Even they use a lot of malay words in their conversation.
As a Malaysian-Indian i can understand your jealousy towards Sri Lankan Tamils. Malaysian-SriLankans are the richest people by race in Malaysia, and most of them do not like their children to marry or even hang around with Indians. They think that as they came to Malaysia to be managers, and the indians came as labourers to work in the rubber plantation, they are superior to them.
சுத்தத்தமிழ் // @ரதி இதிலேயே தமிழ் இல்லை சுத்தம் என்பது வட மொழி வார்த்தையான ஷுத்(shudh) என்பதில் இருந்து வந்தது. "தூய" தமிழ் என்பதுதான் சரி
இதையும் பாருங்களேன்
Post a Comment