நண்பர் வேடிக்கை மனிதனின் 'தாலி புனிதமா?' http://sharavanaanu.blogspot.com/2009/12/blog-post.html என்ற கட்டுரையை படித்த பின்பு எனக்கு ஏதோ ஒரு விதத்தில் தெரிந்த.. தெரிய வந்த தாலியைப் பற்றிய தகவலை இங்கே பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. இதை நண்பரின் கட்டுரைக்கு பின்னூட்டாக போட்டிருக்கலாம்.. சிறு கருத்தாக இருந்திருந்தால்..!
சரி.. இந்த தாலி வந்த வந்த கதைதான் என்ன..?
ஆரம்பத்தில், நாகரிகம் குறைந்திருந்த மனிதனிடம்.. பெண் மோகம் குறைவாகவே இருந்தது.. ஆனால் பின்னாளில் நாகரிகம் வளர வளர மனிதனின் பெண்ணாசை பெருத்துவிட்டது. (அதனால்தானே நான் மிருகத்திடமிருந்து மாறுபடுகிறோம்..! )
ஆரம்பத்தில், மிருகங்களைப் போலவே மனிதனும் தனக்கு தேவைப்பட்ட துணையை தானாக அடைந்தான்.. வலிமையுள்ள, பலசாலியான மனிதன் தன் கூட்டத்திற்கு அரசனானான் அல்லது தலைவனானான். தலைவனானால்.. தான் நினைத்த பெண்களுடன் சல்லாபிக்க ஏது தடை..? தனது ஆக்கிரமிப்பை மற்ற ஆண்களுக்கு உணர்த்த தான் மோகிக்கும் பெண்களின் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி.. தனது அடையாளமாக ஏதாவது ஒரு சிறு பொருளை கட்டி விடுவான் அந்த தலைவன். உதாரணத்திற்கு, அவன் வேட்டையாடி கொண்டு வந்த புலி பற்கள்.. நகங்கள் போன்ற சின்னங்களை கட்டி விட்டான். இதைப் பார்க்கும் மற்ற ஆண்கள்.. அந்த கயிற்றை அனிந்திருக்கும் பெண் அந்த பலசாலித் தலைவனுக்கு சொந்தமானவள் என்று அறிந்து அந்தப் பக்கமே தலை சாய்க்க மாட்டார்கள்.
பின்னாளில், நாகரிகம் வளர வளர இந்த கயிற்றினால் தலைவனுக்கு சில பிரச்சனைகள் தோன்ற ஆரம்பித்தன. அவனுக்கு சொந்தமான பெண்களுக்குள் பொறாமை, போட்டி மற்றும் பல அடிப்படைப் பிரச்சனைகள் ஆரம்பமாயின.. அதனால், தனது அடையாளத்தை.. மாராப்பில் மறைத்து வைக்கச் சொன்னான். நாளடைவில் மற்ற ஆண்களுக்கும் கொஞ்சம் தைரியம் வர, தங்களுக்கு பிடித்த பெண்களை கைப்பிடிக்க ஆரம்பித்தனர். அவர்களும் தலைவனைப் பின்பற்றி ஏதாவது ஒரு சின்னத்தை பெண்களின் கழுத்தினில் கட்டிவிட ஆரம்பித்தனர்.
பின்னாளில் இது ஒரு கலாச்சாரமாக மாறிவிட, பொதுவான சின்னங்களை பயன்படுத்தினர். பெண்கள் திருமணம் ஆனதும், தாமதிக்காமல் குழந்தைப் பேறு கொள்ள வேண்டும் என்று நினைத்து, சில பெண் உறுப்புக்களை தாலியின் சின்னமாக அமைத்தனராம். அப்படி வந்ததுதான் பொட்டுத் தாலி (பெண்ணின் மார்பகம்), திருமாங்கல்யாம் (பிறப்புருப்பைச் சார்ந்திருக்கும் எலும்புகள்) போன்றவை.
இந்த பிறப்பு உறுப்புச் சின்னங்கள்தான் இன்னமும் நம் பெண்களின் கழுத்தில் தாலியாக அலங்கரித்து இருக்கிறது என்று பெரியவர் ஒருவர் சொன்ன கதையைத்தான் இங்கே எழுதியிருக்கிறேன். அவர் சொன்ன விசயங்களை நான் எனக்கு புரிந்த விதத்தில் எழுதியிருக்கிறேன். இந்த கதை என் சிற்றறிவால் ஏற்றுக் கொள்ளப் பட்ட கதை. மற்றவர்கள் கருத்துக் கூறினால் சிறப்பாக இருக்கும்..
நன்றி
K. கிருஷ்ணமூர்த்தி
பின்குறிப்பு : என் மனைவி தாலி அணிவதை நான் விரும்பாததால்.. இன்றுவரை அவளும் தாலி அணிவதில்லை..!
டிராகனின் நடனம்: அமிலக் கல்லறை
4 years ago
7 comments:
தாங்கள் சொல்வது சரியன்றே படுகிறது எனக்கும்
கருத்துக்கு நன்றி தோழரே..! தவறான கருத்தை அம்பலம் ஏற்றிவிடக் கூடாதென்ற அச்சம்தான்..!
உங்களது தாலி பற்றிய இந்தக் கட்டுரையில் புதிய தகவல்களை தந்துள்ளீர்கள், அறியப்பெற்றேன்.
அடிப்படையாக நாம் இருவரும் ஒரே விசயத்தையே இங்கே தெளிவு படுத்துகிறோம். தாலி என்பது ஆணாதிக்கத்தின் அடையாளம் தான் அதில் எனக்கு மாற்றுக் கருத்துக்கள் கிடையாது.
தாலி புனிதம் என்றால், பலவந்தமாக ஒருவர் ஒருபெண்ணின் விருப்பமில்லாமல் அவளுக்கு அதை கட்டுகிறபோது, அவள் அதை பயபக்தியோடு, புனிதத்தோடு பார்ப்பதில்லை. இருமனம் ஒத்துப்போய் இனந்தால் தான் கட்டுகிற தாலிக்கு பெருமை மரியாதை மற்றதெல்லாம்.............
தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்துக்கள்
நண்பரே.. உண்மை..! ஆணாதிக்கத்தின் திறவுகோல்தான் தாலி எனும் வேலி! இதில் வேடிக்கை என்னவென்றால்.. புரட்சித் திருமணங்களில் கூட இங்கே இன்னமும் தாலி கட்டுகிறார்கள்! அதைத்தான் என்னால் புரிந்துகொள்ளவும் முடியவில்லை.. ஏற்றுக் கொள்ளவும் மனமுமில்லை..!
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை என்பதைப் போன்று, உங்கள் பதிவுதான் எனது இந்தப் பதிவின் தூண்டுகோல்.. நன்றி..!
//ஆணாதிக்கத்தின் திறவுகோல்தான் தாலி எனும் வேலி! இதில் வேடிக்கை என்னவென்றால்.. புரட்சித் திருமணங்களில் கூட இங்கே இன்னமும் தாலி கட்டுகிறார்கள்!//
தாலியில் மட்டும் தானா நாம் ஆணாதிக்கத்தை காட்டுகின்றோம்.
இனம், சமயம்,மதம் பேதங்களை கடந்து தமிழ் பேசும் அனைவரும் ஒன்றினைந்து தமிழர் திருநாளை தமிழ்ப் புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாடிடுவோம்.
தாலி வந்த கதையை சொண்ணீர்கள், நன்றி.
இயற்கைஜின் நியதி மாறுபால் கவர்ச்சி.
மனிதர்கள் விலங்குகளில் இருந்து வேறுபடுவார்கள்,
ஏனென்றால் அவர்கள் மற்றவர்களின் சுதந்திரத்தை மதிப்பவர்கள்.
எனவே தாலி ஆண்கள் தப்பாக காமம் கொள்வதை தடுக்கும்.
Post a Comment